கொக்கட்டிச்சோலையில் நினைவேந்தலை நடத்த அரியநேத்திரனிற்கு தடை: ‘மிகுதிக்கு நாளை நேரில் வரவும்!

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திலீபன் நினைவாக உண்ணாவிரதம் அல்லது நினைவு நிகழ்வை நடத்த மட்டக்களப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான அறவித்தலை இன்று 10.45 மணியளவில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் வீட்டில், கொக்கட்டிச்சோலை பொலிசார் கையளித்துள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பில் திலீபன் நினைவேந்தலை நடத்தலாமென கருதப்படும் அரியநேர்திரன் உள்ளிட்ட சிலரை நாளை (26) காலை 7 மணிக்கு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஷ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமூகம் தருமாறு கொரி அதற்கான கடிதத்தையும் கையளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here