சைக்கிளில் யாழ்ப்பாணம் வரும் 73 வயது தாத்தா!

எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் வருவதை முன்னிட்டு காலியிலிருந்து யாழ்நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப் பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலியை சேர்ந்த பர்ணாந்து என்ற 73 வயது முதியவரே குறித்த துவிச்சக்கரவண்டிப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த 23 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டபயணம், இன்றையதினம் வவுனியாவை அடைந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த அவரை சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன் தலைமையில், முதியோர் சங்க பிரதிநிதிகள் வரவேற்றிருந்ததுடன், மாவட்ட அரச அதிபர் சமன பந்துலசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

தனது உணவுபழக்க வழக்கம் மற்றும் போதைபாவனையற்ற வாழ்க்கை முறையால் தான் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டிருப்பதாகவும், இதனாலேயே நீண்ட தூரம் துவிச்சக்கர வண்டிப் பயணத்தை மேற்கொள்ளவும் முடிந்துள்ளது, ஒருவர், ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் 70 வயதிலும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று கூறும் அவர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்குடன் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்,

அவரது பயணம் நாளையதினம் யாழ்பாணத்தை நோக்கிச் செல்லவுள்ளமை குறப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here