8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி

புதிய இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த 8 பேரை குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, சீ.ஏ.சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், எஸ்.அமரசேகர தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் கே.கே.வி.பி.ஹரிஸ்சந்திர சில்வா ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக விஷ்ரமால் சஞ்ஜீவ குணசேகர நியமிக்கப்படவுள்ளதுடன், இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொடவும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக ரவிநாத ஆரியசிங்கவும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகமவை பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராகவும், கலாநிதி பாலித்த கொஹனவை சீனாவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here