அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த அமைச்சர் இந்திக அனுருத்த வைத்தியசாலையில்!

கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நடந்த விபத்தில் காயமடைந்த நிலையில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப், அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு தடுப்புடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக சீதுவ பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த கம்பஹா மாவட்ட எம்.பி இந்திக அனுருத்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலைமையில் இல்லை.

சீதுவ பொலிசார் அமைச்சரின் ஜீப்பைக் காவலில் எடுத்து விபத்து குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here