20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராய 5 நீதியரசர்கள் ஆயம்: 29ஆம் திகதி விசாரணை!

அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைபிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர் நீதிமன்ற ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான இந்த ஆயத்தில், நீதியரசர்கள் புவனேக அலுவிஹர, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மல்லல்கொட ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

மனுக்கள் செப்டம்பர் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படும்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகள் அடங்களாக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here