செல்வச்சந்நிதி ஆலய உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

நாளை (26) செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

10 தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிசார் உண்ணாவிரதத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக ஒன்றுகூட முடியாது, திலீபனை நினைவுகூருவது பயங்கரவாதம் என குறிப்பிட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here