சிறுத்தையை இறைச்சியாக்கிய பெண் உள்ளிட்ட மூவர் கைது!

சிறுத்தையை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் கண்டி கலல்கமுவ பகுதியில் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் உள்ள உடுதும்பர பகுதியில் இந்த விலங்கு நேற்று சந்தேக நபர்களால் கொல்லப்பட்டது.

சிறுத்தை 10-14 வயதுக்கு இடைப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் கருதுகின்றனர்.

சந்தேக நபர்கள் 17 கிலோ எடையுள்ள இறைச்சி, விலங்கின் பல்வேறு பாகங்கள், ஒரு கத்தி மற்றும் முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கலல்கமுவவில் வசிப்பவர்கள். 32-45 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here