எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் முன் பொலிசார் குவிப்பு: பெரும் பரபரப்பு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகமிக ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக வைத்தியசாலை அறிவித்ததை தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முன்பாக பெருமளவானவர்கள் குவிந்துள்ளனர்.

அங்கு பொலிசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில், தற்போது மருத்துவமனையில் காவல் ஆணையர் அருண், மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்பிபியின் தங்கை எஸ்.பி சைலஜா, மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோரும் அங்கு வந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here