20இற்கு எதிரான மனுக்களில் 10 இன் பிரதிகள் சபாநாயகரிடம்!

அரசியலமைப்பில் 20 வது திருத்த வரைவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களின் நகல்களைப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகளின் தொடக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மொத்தம் 12 மனுக்கள் நேற்று மாலை வரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here