போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு முன்னிலையான ராகுல் ப்ரீத் சிங்!

போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்கா நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அலுவலகத்தை அடைந்தார்.

நடிகர் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் கொலபாவில் உள்ள என்சிபி அலுவலகத்திற்கு சென்று விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 10.30 மணியளவில் ரகுல் பிரீத் என்சிபி விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தார். கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் தொலைபேசி வட்ஸ்அப் சட்டில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ராகுல் பரீத் சிங் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் வியாழக்கிழமை தனது அறிக்கையை பதிவு செய்யவிருந்தார். ஆனால் சி.என்.டி.ஆர் ஏஜென்சியிடமிருந்து சம்மன் பெறவில்லை என்று கூறினார். அவரது அறிக்கைக்குப் பிறகு, என்.சி.பி அதிகாரிகள் அவரை அணுகி சம்மனை கையளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்.

ராகுல் பிரீத் சிங் தவிர, தீபிகா படுகோனே, சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் சுசாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பான அதன் விரிவான போதைப்பொருள் விசாரணையில் என்.சி.பி. புலனாய்வாளர்களால் விசாரணைக்குட்படவுள்ளனர்.

செப்டம்பர் 9 ம் தேதி போதைப்பொருள் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரியாவை விசாரித்தபோது ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் பெயர்கள் வெளிவந்தன.

தற்போது மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியா சக்ரவர்த்தி, “ஒரு போதை மருந்து வலையமைப்பின் தீவிர உறுப்பினர்” என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி மாதங்களில் அவருக்கு போதை மருந்துகளை ஏற்பாடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திறமை முகவர் ஜெயா சஹாவின் தொலைபேசியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைகளில் தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரின் பெயர்கள் வெளிவந்துள்ளன, இது விசாரணையாளர்களால் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக அரட்டைகள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here