கைத்துப்பாக்கியை மறைத்துக் கொண்டு சென்ற 3 ஈழத்தமிழர்கள் கனடாவில் கைது!

கனடாவில் சட்டவிரோதமாக துப்பாக்கியை கொண்டு சென்ற 3 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் அவர்களை கைது செய்ததாக டர்ஹாம் பொலிசார் நேற்று தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், ​​வின்செஸ்டர் வீதி மற்றும் விட்பி வாட்ஃபோர்ட் வீதிக்கிடையில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

வாகனத்தில் திறந்தபோது மதுபான போத்தல்கள் தென்பட்டதையடுத்து, மேலதிக சோதனை நடத்தியதில், வாகனத்திற்குள்ளிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் மிட்கப்பட்டது.

இதையடுத்து வாகனத்தை செலுத்திய ஒஷாவாவை சேர்ந்த அப்பாத்துரை கஜன் (39), டொராண்டோவின் பிளாக்வெல் அவென்யூவைச் சேர்ந்த பிரதீப் பரமானந்தன் (29) டொராண்டோவின் போல்டர்ப்ரூக் டிரைவைச் சேர்ந்த சஜீத் செல்வநாதன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமில்லாத துப்பாக்கியை வைத்திருந்தது, கொண்டு சென்றது, கவனக்குறைவாக வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்ப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here