அவசரப்பட்டு second hand வாகனம் வாங்குபவர்களிற்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான சமீபத்திய முடிவின் காரணமாக, பாவித்த வாகனங்களின் (second hand) விலை சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தால் அதை கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கடுவெலவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பாவித்த வாகனங்களின் சந்தையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

வாகன இறக்குமதி தற்காலிக நடவடிக்கை, நிரந்தர நடவடிக்கை அல்ல. பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்பதால், தற்போதைய நிலைமையை மனதில் வைத்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு திருப்திகரமான அளவில் உள்ளது என்று அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் வாகன இறக்குமதி தடை  தளர்த்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here