கோட்டா திடீரென நுழைந்த அலுவலகம்: அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

நாரஹேன்பிட்டிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தின் அதிகாரிக்கும், மாவட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீரென சென்றார். இதன்போது, மாற்று திறனாளியொருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தார். தான் பலமுறை அலுவலகத்திற்கு வந்ததாகவும், போதிய ஆளணியில்லையென கூறி தான் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து அவதானித்ததில், போதிய ஆளணி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கணக்காய்வு குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here