பங்களாதேஷ் பயிற்சி முகாமிலிருந்து அபு ஜெய்த் தனிமைப்படுத்தல்!

இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் அபு ஜெய்த் நீக்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) அறிவித்துள்ளது.

பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட 27 வீரர்களும் பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் வேகப்பந்து வீச்சாளர் அபு ஜெயத் சவுத்ரி ரஹி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அதன்படி, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

வேகப்பந்து வீச்சாளர் அபு ஜெய்த் 3 வடிவங்களிலுமாக 14 சர்வதேச போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது கடைசியாக சிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டில் ஆடினார். அதில் அவர் 4-75 என்ற தனது சிறந்த பந்துவீச்சு பெறுபேற்றை பெற்றார்.

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பெயரிடப்படாத ஒரு வீரரை முகாமில் இருந்து தனிமைப்படுத்தியதாக வாரியம் முன்பு அறிவித்தது.

டெஸ்ட் ஆட்டக்கார் சைஃப் ஹாசன் மற்றும் அணியின் உடல் செயல்திறன் தலைவர் நிக்கோலஸ் லீ ஆகியோரும் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here