யாழ் மாநகரசபை கண்மூடித்தனம்: வர்த்தகர்களிடம் 100 வீத வாடகை அதிகரிப்பு!

யாழ் மாநகரசபையினால் திடீரென உயர்த்தப்பட்ட வர்த்தக நிலைய வாடகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாநாகரசபையின் வர்த்தக நிலைய வாடகைகளை 100 வீதம் அதிகரிப்பதென அண்மையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா நிலவரத்தினால் அனேகமாக இறக்குமதி பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த சுமார் 1,000 இற்கும் அதிகமான பொருட்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தகர்கள் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், யாழ் மாநகரசபை வர்த்தக நிலைய வாடகைகளை 100 வீதத்தால் அதிகரிப்பதென முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தகர்கள் சார்பில் வடக்கு ஆளுனரிடமும் முறையிடப்பட்டுள்ளது. வர்த்தகர்களின் நிலைமை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை 3 மாதங்கள் ஒத்திவைக்குமாறு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here