கதவடைப்பிற்கு பெருகும் ஆதரவு: வடக்கு, கிழக்கு முற்றாக முடங்கும்!

எதிர்வரும் திங்கள்கிழமை (28) வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான வர்த்தக சங்கங்கள், பொதுஅமைப்புக்கள் என போராட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றன.

இதனால், திங்கள்கிழமை வடக்கு, கிழக்கு முற்றாக முடங்கவுள்ளது.

ஏற்கனவே நடந்த கதவடைப்பு போராட்டங்கள் சிலவற்றிற்கு வவுனியா வர்த்தகசபை ஆதரவளித்த விவகாரத்தில், அதன் மீது இரண்டு வழக்குகள் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் இம்முறை வர்த்தக சங்கங்கள் பகிரங்க அறிவிப்பு விடுக்காமல், எதிர்வரும் திங்கள்கிழமை வடக்கிலுள்ள வர்த்தக சமூகம் வர்த்தக நிலையங்களை திறக்காமலிருக்க முடிவு செய்துள்ளதாக அறிய வருகிறது.

நினைவேந்தல் விவகாரத்தில் ஈ.பி.டி.பி கட்சி மாத்திரம் குதர்க்கம் பேசி, குழப்பம் விளைவித்து வந்தாலும், ஏனைய தமிழ் தரப்புக்கள் ஓரணியாக நிற்பதால், வர்த்தக சமூகம் போராட்டத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக பல்வேறு வர்த்தக சங்க பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here