எண்ணெய் கப்பல் உரிமையாளர்களிடம் மேலும் 100 மில்லியன் கேட்கிறது இலங்கை!

தீ விபத்தில் சிக்கிய எம்டி நியூ டயமண்ட் கப்பலின் உரிமையாளர்களிடமிருந்து மேலும் ரூ .100 மில்லியன் இழப்பீடு கோரியதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கப்பல் உரிமையாளர்களிடமிருந்து இலங்கை மொத்தம் ரூ .440 மில்லியன் இழப்பீடு கோரிள்ளது.

முன்னதாக இன்று எம்டி நியூ டயமண்ட் உரிமையாளர்கள் முழுமையாக தீர்வு காண ஒப்புக் கொண்டனர். தீயணைப்பு செலவாக ரூ .340 மில்லியனுக்கும் மேலாக, தீவிபத்தினால் ஏற்பட்ட கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் செலவுகளாக மேலும் ரூ 100 மில்லியன் கோரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் திகதி சங்கமன்கந்தை கரையிலிருந்து 35 கடல் மைல் தொலைவில் காலை 7.45 மணியளவில் என்ஜின் அறை வெடித்ததால், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தீ அணைக்கப்பட்டது.

இந்த கப்பல் தற்போது மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 67 கடல் மைல் தொலைவில் ஆழமான கடலில் தரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here