ஆரம்பத்திலேயே பணிய வைக்க கோட்டா அரசு முயற்சி?

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீக்கப்பட்டாமை மற்றும் தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காமை தொடர்பில் இன்று நண்பகல் தொடக்கம் தமிழ் கட்சிகள் கூடி உணவு ஒறுப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்தவுடன் நல்லுார் இளங்கலைஞர் மண்டபத்திற்கு வந்த பொலிஸார் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தாவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கூட்டத்தில் பேசப்பட்டுள்ள விடயங்கள் என்ன, தீர்மானங்கள் என்ன என வினவப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீக்கப்பட்டாமை மற்றும் தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காமை தொடர்பில் இன்று நண்பகல் தொடக்கம் தமிழ் கட்சிகள் கூடி உணவு ஒறுப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதேவேளை, சிவில் உடையில் வந்த ஏராளம் பொலிசார் மண்டபத்திற்கு முன்பாக வீதியோரம் நின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here