இடைக்கால கொடுப்பனவான 340 மில்லியனை வழங்க இணங்கிய கப்பல் நிறுவனம்!

இலங்கை கோரிய 340 மில்லியன் ரூபாவை வழங்க, எம்டி நியூ டயமண்டின் உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர். இது குறித்து தப்புல டி லிவேராவுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன கூறுகையில், இடைக்கால உரிமை கோரலான 340 மில்லியனையும் வழங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர் என்றார்.

செப்டம்பர் 3 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கடலில்- சங்கமன்கந்தையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்தது.

இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரின் கூட்டு முயற்சிகள் மற்றும் பிற சர்வதேச உதவிகளின் காரணமாக இந்த தீ கட்டுப்படுத்தபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here