கிளிநொச்சியில் 43 இளைஞர், யுவதிகளிற்கு தொழில் பெற்றுக்கொடுத்த இராணுவ அதிகாரி!

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 43 பேருக்கு 572வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி.எம்.பி.பி.தசனாயக்கவினால் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி குறிதத் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு
இடம்பெற்றுள்ளது. பூட் சிற்றி வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத்தெரிவிற்காக 377 பேர் வருகை தந்திருந்த நிலையில் அவர்களில் 43 பேர் தகுதி அடிப்படையில் வேலைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளிற்கான தொழிற்சாலை வசதிகள், வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின்
முயற்சியால் 43 வறிய குடும்பங்கள் தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here