சினிமாவை விஞ்சிய சாகசம்: ஸ்க்ரூடிரைவர் மூலம் சுரங்கம் தோண்டி சிறையிலிருந்து தப்பித்த போதைப்பொருள் கடத்தல்காரன்!

பிரபல ஹொலிவூட் திரைப்படமான The Shawshank Redemption பாணியில் இந்தோனேஷியாவில் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்ற பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள டாங்கேராங் சிறைச்சாலையில் இருந்து மணதண்டனை கைதியான சீனாவை சேர்ந்த சாய் சாங்பன் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளார். 30 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை ஒரு ஸ்க்ரூடிரைவர், உளி மற்றும் இரும்பு தடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தோண்டி, தப்பிச் சென்றுயுள்ளார்.

சிறைச்சாலையின் சமையலறையிலிருந்து கருவிகளைத் திருடி, 50 செ.மீ அகலமுள்ள சிறிய சுரங்கப்பாதையை தோண்டியுள்ளார். 30 மீட்டர் நீளமான அந்த சுரங்கப்பாதை கழிவுநீர் வாய்க்காலை சென்றடைந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரன் அந்த சுரங்கம் வழியாக வெளியேறி, கழிவு வாய்க்காலை அடைந்து, கழிவு வாய்க்காலால் சிறிது தூரம் சென்று வீதியில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். அவர் வீதியில் ஏறி தப்பிச் செல்வது சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது.

53 வயதான சாங்பன் இந்த சாகச தப்பித்தலை மேற்கொள்ள ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை திட்டமிட்டிருக்கலாமென பொலிசார் தெரிவித்தனர்.

சிறைக்காவலர்கள் மாற்றப்படும் நேரங்களில் அவர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

சுரங்கத்திலிருந்து வெளியேறி, 400 மீட்டர் கழிவுவாய்க்கால் வழியாக ஊர்ந்து சென்று, வீதியில் ஏறி தப்பினார்.

இந்தோனேசியாவில் அதிகம் தேடப்படுபவராக சாங்க்பன் இப்போது பெயரிடப்பட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குடிவரவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

110 கிலோ மெத்தாம்பேட்டமைனை நாட்டிற்கு கடத்திய குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் 2017 ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளி தடுப்புக்காவலில் இருந்து தப்பிக்க இது முதல் தடவை அல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது விசாரணையின் போது ஒரு பொலிஸ் செல்லில் அடைக்கப்பட்டிருந்தபோது, ​​அவர் மற்ற கைதிகளுடன் இரும்புப் பட்டியைப் பயன்படுத்தி குளியலறையில் ஒரு துளை உருவாக்கி தப்பி ஓடினார்.

The Shawshank Redemption படக்காட்சி

2.5 மீட்டர் சுவரை தாண்டி தப்பிச் சென்று, மேற்கு ஜாவாவில் ஒரு வாடகை குடியிருப்பில் மூன்று நாட்கள் பதுங்கியிருந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here