கொட்டத்தை அடக்குங்கள்: மகாசங்கங்களிடம் முறைப்பாடாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரௌடித்தனத்தில் ஈடுபடும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடவடிக்கைகள் தொடர்பில் பௌத்த மகாசங்கங்களிடம் முறையிடுவதென மாவட்டத்தின் பல் சமயங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

நேற்று அந்த சங்கம் ஒன்று கூடி, அம்பிட்டிய சுமணரட்ன தேரர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பங்குடாவெலி எனும் கிராமத்தில் சட்ட ஒமுங்குக்கு மாறாக நடந்து கொண்ட விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட து.

இதன்போது, அவரது செயற்பாட்டை ஏகமனதாக கண்டிப்பது என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பௌத்த மகாசங்கத்திற்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றினை அனுப்புவதெனவும் அத்துடன் ஊடக சந்திப்பினூடக கண்டனத்தை தெரிவிப்பதெனவும் மற்றும் சட்ட ஆலோசனையைப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதெனவும் தீா்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here