முகமாலையில் புலிகளின் பற்களும் மீட்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்றும் (22)
எலும்புக்கூடுகள் மீட்பு நடைப்பெற்று அகழ்வுப் பணி நிறைவடைந்துள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில்
கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள்
இனங்காணப்பட்டு பளை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் நேற்றும் அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நேற்றும் நேற்று முன்தினமும் அகழ்வு பணி இடம் பெற்றிருந்த
நிலையில் அகழ்வின்போது விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் மனித
எச்சங்கள் ஆன மண்டையோடுகள், எலும்புகள் போன்றன மீட்கப்பட்டதுடன்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப்
புலிகளின் போராளிகள் அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் இலக்கத்
தகடுகள் இரண்டு என்பன மீட்கப்பட்டன.

குறித்த அகழ்வு தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு நேற்று (23) மாலை 3.00மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டடுஅகழ்வு பணி 5மணியளவில் நிறைவடைந்தது.

இந்த அகழ்வுப் பணி இராணுவத்தினர், பொலிசார் முன்னிலையிலும் இடம்பெற்றது.
இந்த அகழ்வின் போது தகடு 01, மண்டையோடு 02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பற்றி , மகசின் 02 என்பன மீட்கப்பட்டது.

நேற்றுடன் இந்த அகழ்வு பணி நிறைவடைந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here