ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா!

மாத்தறை பொல்ஹென பகுதியில் ஹொட்டலொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று (23) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளானவர் உள்ளிட்ட பதினைந்து ரஷ்ய பிரஜைகள் ஓகஸ்ட் 13 ம் திகதி மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைந்து, ஹொட்டலில் தங்கியிருந்தனர்.

அவர்கள் இன்று (24) நாட்டை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்தனர். அதற்கு முன்பு மாத்தறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே ஒருவர் தொற்றுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ரஷ்யர்கள் குழுவிலிருந்த நான்கு பேர் நேற்று அந்த பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யர் தங்கியிருந்த ஹொட்டலின் 23 ஊழியர்களும், அவர்கள் குடும்பங்களும், ஹபரடுவ பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here