சீனா வைரஸ்: ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்

கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இவ்வாண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக சீனாவை மீண்டும் விமர்சித்திருக்கிறார். அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களிடம் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அழையுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “நான் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகி நாட்டை மீண்டும் வல்லரசாக மாற்றுவேன். சீனா மீதான நம்பகத்தன்மை முடிவுக்கு வரும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 60 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here