களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக கல்வி நிருவாக சேவை தரம் மூன்றைச் சேர்ந்த முருகமூர்த்தி சபேஸ்குமார் நேற்று தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே அதிபராக கடமையாற்றிய தம்பிராசா ஒய்வு பெற்றுச் சென்றதன் பின்னர். மத்திய கல்வி அமைச்சின் செயலாளரினாலையே குறித்த அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முருகமூர்த்தி சபேஸ்குமார் தனது ஆரம்ப கல்வியை தம்பிலூவில் சரஸ்வதி வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை தம்பிலூவில் மத்திய மகா வித்தியாலத்திலூம் கற்று சித்தியடைந்து கிழக்கு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான மானி பட்டத்தினைபெற்று வெளியேறினார். கணித ஆசிரியராக நியமனம் பெற்று தம்பிலூவில் மகா வித்தியாயம் மற்றும் பொத்துவில் மகா வித்தியாலயத்திலும் பத்து வருடங்களாக ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில் கல்வி நிருவாக சேவை போட்டி பரீட்சையில் சித்தி பொற்ற இவர் திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய கல்வி வலயங்களில் உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன் கல்வி முதுமானி பட்டத்தினை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here