டிக்ரொக்கிற்கு தடையா?: இலங்கையின் அறிவிப்பு!

சீனாவின் கையடக்க தொலைபேசி செயலிகளால் இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் இந்தியாவும் டிக்ரொக் உட்பட பல சீன கையடக்க தொலைபேச செயலிகளை தடை செய்திருந்தன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனநாயக்க தெரிவிக்கையில்,

“ஒவ்வொரு கையடக்க தொலைபேசி செயலி பயன்பாட்டையும் கண்காணிக்க இலங்கைக்கு வழி இல்லை. ஆனால் இது தொடர்பாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பின்பற்றுகிறோம்.

சீன செயலி பயன்பாடுகளைப் பற்றி எழுப்பப்படும் கவலைகள் குறித்த உலகளாவிய நிலைமை அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சீன செயலி பயன்பாடுகள், குறிப்பாக டிக்ரொக் குறித்து இலங்கையில் எந்த முறைப்பாடும் பதிவானவில்லை“ என்றார்.

இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் நடைமுறையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

சீன செயலி பயன்பாடுகளுக்கு எதிராக சில நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அந்த செயலிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்படும் வரை, இலங்கை அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here