20வது திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைபிற்கு எதிராக மேலும் நான்கு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனு தாக்கல் செய்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கல்லேஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், மாற்று கொள்கைகளிற்கான மையத்தின் சார்பாக பைக்கியசோதி சரவணமுத்து, அனில் கரியவசம் மற்றும் நாகானந்த கொடித்துவக்கு ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்தனர்.

முன்மொழியப்பட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்ற வேண்டும் என்றும், பொது வாக்கெடுப்பு மூலம் சட்டமியற்ற வேண்டும் என்றும் கூறி ஒரு உத்தரவை பிறப்பிக்க மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

20 வது அரசியலமைப்பு திருத்தம் நேற்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here