உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறைவு: வழக்கு ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கோப்புகள் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக என்று சிஐடி அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக இந்த வழக்கை மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் அழைப்பதாக கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.யூ.ஜெயசூரியா உத்தரவிட்டார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மற்றும் முன் உளவுத்துறை தகவல்களைப் பெற்ற போதிலும், ஏற்பட்ட அழிவைக் குறைக்கத் தவறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here