இலங்கை வரலாற்றில் முதல்முறை: ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இளைஞர்களிற்கு இன்று தீர்ப்பு!

இலங்கை வரலாற்றில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் என குற்றம்சாட்டி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இளைஞர்கள் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது. நீதிவான் சீலானி பெரேரா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்.

கோட்டை பொலிசாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் தம்மை ஓரினச்சேர்க்கையாளர்கள் என ஏற்றுக்கொண்டனர்.

இருவரும் தலா 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here