பாண்டிய மன்னர்களின் சின்னங்களுடன் பண்டைய நாணயங்கள், வாள், மட் பாண்டங்கள் மீட்பு!

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ‘வடக்கு வீதி’ என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள் சட்டி பானை ஓட்டுத் துண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணியின் உரிமையாளரினால் வீடு கட்டுவதற்கான பள்ளம் தோட்டிய போதே இந்த நாணய குற்றிகள் வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து உப தவிசாளர் புவனம் முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த நாணயக் குற்றிகளை ஒப்படைத்தார்.

இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல்பொருள் தினைக்களத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்தார்

பாண்டியர் கால தொல்லியல் பொருட்களாக இவை கருதப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here