மனித எச்சங்கள்… வரிப்புலி சீருடை… தகடு,குப்பி… பிரபாகரன் படம் மீட்பு!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில்
கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள்
இனங்காணப்பட்டு பளை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் நேற்று அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வின்போது விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் ஆன மண்டையோடுகள், எலும்புகள் போன்றன மீட்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராளிகள்
அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் இலக்கத் தகடுகள் இரண்டு என்பன
மீட்கப்பட்டதுடன் குறித்த அகழ்வு தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில்
இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here