பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி… அசத்தலாக செயற்பட்டு தந்தையை காப்பாற்றினார்!

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவர், துணிச்சலாக செயற்பட்டமைக்கான தங்க விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உயிராபத்தான நிலைமையில் மயக்கமடைந்த தனது தந்தையை, பதற்றமின்றி காப்பாற்றியமைக்காக 5 வயதான அந்த சிறுமி கௌரவிக்கப்பட்டார்.

சாம் சூரியகுமார் (34)- சிந்து தம்பதிகளின் புதல்வியான அவரது, துணிச்சலான செயற்பாட்டை இங்கிலாந்து ஊடகங்கள் விதந்தோதி வருகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த சம்பவம் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. லண்டனின் சுட்டனின் வொர்செஸ்டர் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சாம் சூரியகுமார் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

அப்போது வீட்டில் அவரது மகள்களான அவானா சாமுவேல் (5), ஆர்யா (3) ஆகியோர் இருந்தனர். மனைவி வெளியில் சென்றிருந்தார்.

தந்தை மயக்கமடைந்ததும், தனது சகோதரி ஆர்யாவை இன்னொரு அழைத்து சென்றுள்ளார். பின்னர் உடனடியாக தாய் மற்றும் வேறு சில உறவினர்களிற்கு அழைப்பேற்படுத்தி தகவலை பகிர்ந்துள்ளார்.

பின்னர் அவசர இலக்கமான 999ஐ அழைத்து, தகவலை தெரிவித்துள்ளார். அவசர இலக்கத்திலிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, தந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைத்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் குழு அங்கு விரைந்த போது, அவர்கள் ஆச்சரியப்பட்டனர். 5 வயது சிறுமி நிலைமையை பதற்றமின்றி கையாண்டுள்ளதுடன், தம்மால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி தந்தையை பாதுகாப்பான நிலைமைக்கு மாற்றியிருந்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சாம் சூரியகுமார் சிகிச்சையளிக்கப்பட்டு பரிசோதித்ததில், மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது.

அவானா பதற்றமடையாமல் செயற்பட்டதாலேயே தந்தையை காப்பாற்ற முடிந்தது, அவர் 5 நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் தந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என வைத்திய வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்தன.

அவர் கல்வி கற்கும் பாடசாலையில் துணிச்சலான மாணவியென்ற விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அது ஆபத்தானது என்பதால் அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதற்காக தற்போது நிதி திரட்டி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here