யாழ் இந்து ஆலயங்களிற்கு மஹிந்த அனுப்பிய பணம்!

புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் (19) சனிக்கிழமை அன்று மாலை யாழ்.மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டது.

இதற்கான படிவங்கள் மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது. மாவட்ட செயலகத்தில் நடந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பொதுஜன பெரமுன கூட்டு எம்.பி அங்கஜன் இராமநாதன் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here