யுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணின் பாவாடைக்குள் படம் எடுத்த ஒருவர் துரத்திப் பிடிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தடுத்து வைத்தவர்கள் அதிக பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றும், நோய் காரணத்தால் விளைந்த மரணம் என்றும் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் இன்று கூறினார்.

பெண்ணின் பாவாடைக்குள் ஆண்ட்ரு ஹோ சீ மெங் (46) என்பவர் படம் எடுப்பதைக் கவனித்த அந்த பகுதியிலிருந்த மூவர், அவரை விரட்டத் தொடங்கினர். நீவன் ரோட்டில் மூவரும் ஆசாமியை பிடித்தனர்.

அவரது கைகால்களைப் பிடித்தபடி, அவரது காற்சட்டைக்குள்ளிருந்த கைபேசியை ஒருவர் எடுத்துக்கொண்டார். அந்தக் கைபேசியில் பாவாடைக்குள் எடுக்கப்பட்ட 47 படங்கள் இருந்தன.

இந்த சமயத்தில் மேலும் இருவர் அந்த பகுதியில் வந்து, ஆசாமியை தடுத்து வைப்பதில் உதவினர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதய தசை தொடர்பான நோய் ஹோவுக்கு இருந்ததாகவும் ஓடியதில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு, மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கும் என்றும் பிரேத பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here