ஆடையை சரி செய்த பின்னர் மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்பட்ட அதாவுல்லா!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தனது உடையை சரிசெய்த பின்னர் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அதாவுல்லா அணிந்திருந்த ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது ஆடை நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என்று கூறி எதிர்க்கட்சி ஆட்சேபனைகளை எழுப்பியது. இது இலங்கை நாடாளுமன்றமா, பாகிஸ்தான் நாடாளுமன்றமா என கொந்தளித்தனர். இதைத் தொடர்ந்து, அதாவுல்லாவை சபையிலிருந்து வெளியேற கோரப்பட்டது.

பின்னர் அவர் தனது மேலங்கி பொத்தான்களிட்ட பின்னர் மீண்டும் சபைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here