நேற்று அடையாளம் காணப்பட்ட 12 தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

இலங்கையில் நேற்று (21) 12 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மாலைதீவில் இருந்து 8 பேர், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தலா ஒவ்வொருவர் மற்றும் இரண்டு இந்திய கடலோடிகள் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 3,299 ஆக உயர்ந்துள்ளது.

10 வெளிநாட்டினர் உட்பட 186 பேர் தற்போது ஐந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து நேற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,100 ஆக உயர்ந்தது.

கொரொனா தொற்று சந்தேகத்தில் 38 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here