நிபந்தனைகளுடன் நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்படுமா?: அரசியல் வட்டாரத்தில் திடீர் எதிர்பார்ப்பு!

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க கூடாதென தமிழ் மக்கள் ஏகோபித்து வலியுறுத்துவதையடுத்து, அரசு இந்த விவகாரத்தில் இறங்கி வரமுடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்களின் ஊடாக, நீதிமன்ற தடை உத்தரவை பெற்று நினைவேந்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

தியாகிகளிற்கு அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி தமிழ் மக்களும், அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருவதையடுத்து, விவகாரத்தை சிக்கலாக்காமல் அஞ்சலிக்கும் உரிமையி் தலையிடாமலிருக்க அரசு தீர்மானித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக்கோரி யாழ் நீதிமன்றத்தில் பொலிசார் தொடர்ந்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக பொலிசார் தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதனால் வழக்கு மதியம் 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவின்படி, நிபந்தனைகளுடன் அஞ்சலிக்க பொலிசார் அனுமதிப்பார்களா என்ற பரவலான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here