தொல்லை தாங்க முடியாமல் கணவனை பெற்றோல் ஊற்றி கொளுத்தியது மனைவியா?

எரிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தை சேர்ந்த ஒருவரே தீக்காயங்களிற்கு உள்ளானார்.

நேற்று முன்தினம் (19) அவர் தீக்காயங்களிற்கு உள்ளானார்.

கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மனைவியே பெற்றோல் ஊற்றி தீமூட்டினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மனைவியுடனான முரண்பாட்டையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி, வேறிடத்தில் கணவன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது பிள்ளைகளை பார்க்கப் போவதாக கூறி, வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது தம்பதிகளிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன்போதே தீமூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here