மணிவண்ணன் அதிரடி: 3 பேர் கொண்ட விசாரணைக்குழு; கஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான விளக்க கடிதத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அண்மையில் பகிரங்க செய்தியாளர் சந்திப்பில், மணிவண்ணனை கட்சியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்த விளக்கத்தை 14 நாட்களிற்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார்.

அத்துடன், அது குறித்த கடிதத்தையும் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில், அந்த கடிதத்திற்கான பதில் கடிதத்தை எழுத்து மூலமாகவும், கஜேந்திரகுமார் பாணியில் வட்ஸ்அப் வழியாகவும் மணிவண்ணன் அனுப்பி வைத்துள்ளதாக கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

நேற்று இந்த கடிதம் அனுப்பப்பட்டள்ளது.

அந்த கடிதத்தில் கட்சி மேற்கொள்ளும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதில் 3 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை பகிரங்கமாக- ஊடகங்கள் முன்னிலையிலாயினும்- நடக்க வேண்டும். ஓய்வபெற்ற நீதிபதி அல்லது விசாரணை நடத்தும் தகுதியுடைய அதிகாரி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவாக இருக்க வேண்டும், அதேவேளை, என் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு சமாந்தரமாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மீது தன்னால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இருவர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here