20 இலட்சத்திற்கு நன்றி!

பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளுக்கும், புதுமுக நடிகைகளிற்கும் முக்கிய அஸ்திரமாக உள்ளது போட்டோ ஷூட்.

நடிகைகள் இயக்குனர்களின் மேனேஜரை தேடி தேடி அவர்களின் தொடர்பை பெற்றுதான் இயக்குனர்களை சந்தித்து சான்ஸ் வாங்குவது அந்தக்காலம்.

இப்போது அப்படியல்ல. போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டகிராமில் பதிவிட்டால் சரி.

இப்படி கவர்ச்சி கடை விரித்துத்தான் தர்ஷா குப்தா, சிவாணி நாராயணன் எல்லோரும் வாய்ப்பை பிடிக்கிறார்கள்.

மொட்டைமாடி போட்டோ ஷூட்டில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ரம்யா பாண்டியன் பல பட வாய்ப்புகளை அள்ளி விட்டார். அதை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா தனது உதட்டை போட்டு தன்னை தானே சுவைத்து அவரும் பல பட வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் மிகவும் உச்சகட்டமான கவர்ச்சி புகைப்படங்களை நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா.

இவர் இந்த திரைப்படத்தில் ஆண்டி போன்ற தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இப்பொழுது உடல் எடையை குறைத்து, கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்கள். ரசிகர்கள் பூனம் பாஜ்வாவின் சமூக ஊடகங்களில் தவமிருக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புக்கள் இல்லாமல், அக்கா, ஆன்டியென நடித்துக் கொண்டிருந்தவர், சமூக ஊடகங்களில் கவர்ச்சிக்கடை விரிக்கத் தொடங்கியதையடுத்து, அவருடைய இன்ஸ்டகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் கட கட வென உயர்ந்து தற்போதுஇருபது லட்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், 20 லட்சம் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here