சிறைக்குள் சிகரெட் கேட்டு தகராறு செய்த நடிகைகள்!

போதைப்பொருள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் என்ற கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவருக்கும் சிகரெட் மற்றும் மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சிறையில் இருக்கும் இவர்கள் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்ததாகவும் சிகரெட் கொடுக்க பெண் காவலர்கள் மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராகினி திவேதி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here