உடுவில் அகிலன் சனசமூக நிலையத்துக்கு புதிய கட்டிடம்

உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடம் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிலையத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக சனசமூக நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதன்போது சனசமூக நிலையத்தினால் சிறப்பாக செயற்படும் சிறுவர்களை ஊக்குவிக்கும் முகமாக விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி யோகா மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here