ஹரீனின் தகவலை மறுக்கும் பேராயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அளித்த அறிக்கையை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரின் பெர்னாண்டோவின் அறிக்கையை ஆயர்களும் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹரின் பெர்னாண்டோ அளித்த அறிக்கை கொழும்பு பேராயர் உட்பட முழு மதகுருக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த நாளில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு பொது தேவாலயத்தில் பேராயர் திருப்பலி ஒப்புக்கொடுக்கவில்லையென்பதை தெரிவித்திருந்த ஹரின் பெர்னாண்டோ, வரவிருக்கும் ஆபத்து குறித்து பேராயரும் அறிந்திருப்பார் என்று ஊகிப்பதாக தெரிவித்திருந்தார்.

கொழும்பு பேராயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த அறிக்கை தவறான மற்றும் பேராயருக்கு எதிரான நியாயமற்ற தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here