ஐபிஎல் தொடர் 2வது நாள் ஆட்டம்: டெல்லி சுழற்பந்தாளர்களும், பஞ்சாப் துடுப்பாட்ட வீரர்களும் கோதாவில்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கின. தொடரின் 2வது நாளான இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கப்பிடல்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த ஆட்டம் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை உள்ளடக்கிய பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கும், வலுவான சுழற்பந்து வீச்சை கொண்ட டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து வீச்சு கூட்டணி பஞ்சாப் அணிக்கு கடும் சவால் தரக்கூடும். ஏனெனில் துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் துடுப்பாட்டத்திற்கு ஸ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த், ஷிகர் தவன், சிம்ரன் ஹெட்மைர், அஜிங்க்ய ரஹானே
ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல், கிளென் மக்ஸ்வெல், கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடி வீரர்களாக உள்ளனர். இதில் மக்ஸ்வெல் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி தொடரைக் கைப்பற்ற உறுதுணையாக இருந்தார்.

இவர்களுடன் மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில்
முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் பலம் சேர்க்கக் கூடும். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

அணிகள் விவரம்

டெல்லி: ஸ்ரேயஸ் ஐயர் (கப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், பிருத்வி ஷா, சிம்ரன் ஹெட்மையர், காகிசோ ரபாடா, அஜிங்க்ய ரஹானே, அமித் மிஸ்ரா, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, அக்சர் படேல், சந்தீப் லாமிச்சன், மோஹித் சர்மா, அன்ரிச் நார்ட்ஜே, அலெக்ஸ் கேரி, அவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ்.

பஞ்சாப்: கே.எல்.ராகுல் (கப்டன்), மயங்க் அகர்வால், ஷெல்டன் கோட்ரெல், கிறிஸ் கெய்ல், கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷாம், நிக்கோலஸ் பூரன், இஷான் பொரல், அர்ஷ்தீப் சிங், முருகன் அஷ்வின், கிருஷ்ணப்பா, ஹர்பிரீத் ப்ரார், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சர்ப்ராஸ் கான், மந்தீப் சிங், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், சிம்ரன் சிங், ஜெக
தீஷா சுசித், தஜிந்தர் சிங், ஹர்டஸ் வில்ஜோன்.

இன்றைய போட்டி

நேரம்: இரவு 7.30
இடம்: துபாய்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here