பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி மற்றும் பெண்கள் ஊடக அமைப்பு

பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி மற்றும் பெண்கள் ஊடக அமைப்பு ஆகியன இணைந்து 2018 டிசம்பர் மாதம் தொடக்கம் 2019 டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை, மஸ்கெலியா, கொட்டகலை, அம்பகமுவ, அட்டன் டிக்கோயா போன்ற உள்ளுராட்சி சபை அமர்வுகளை கண்கானிப்பு செய்தது.

இக்கண்கானிப்பின் மூலம் பெறப்பட்ட பெறுபெறுகளின் அடிப்படையிலான கலந்துரையாடல் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி.லோகேஸ்வரி அவர்களின் தலைமையில் நுவரெலியா சம்பத் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரதி ஆணையாளர் திரு.வீரகோன், நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயர் யதர்ஷனா, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்செல்வம், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் செண்பகவள்ளி, சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here