வாகரை பிரதேசத்தில் 22038 ஏக்கரில் பெரும்போக பயிர் செய்கை!

வாகரை பிரதேசத்தில் இம்முறை பெரும்போகச் செய்கையில் சுமார் 22038 ஏக்கரில் பயிர் செய்கைப் செய்யப்படவுள்ளதாக ஆரம்பக் கூட்டத்தில் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேதனப் பசளை பாவிப்பவர்களுக்கே இரசாயான உர வினியோகத்தில் முன்னுரிமை காட்டப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்ட்டது.

நேற்று சனிக்கிழமை வாகரை பிரதேச செயலாக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்திலே மேற்படி இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இக் கூட்டத்தில் விவசாயிகள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அதிகாரிகளினால் தீர்வு வழங்கப்பட்டது.

குளங்கள், வீதிகள், வாய்க்கால்கள் புனரமைத்தல், உர வினியோகம், விதை நெல், கால் நடை அகற்றல், காட்டு யானை தொல்லை, விவசாய காப்புறுதி, சேதனப் பசளை இடல், வட்டக் கூலி வழங்கும் விடயம், நீர்பாசனம், விதைப்பு, நாட்கூலி, அறுவடை, கட்டுமுறிவு, ஆண்டான் குளம், தோணி தாண்ட மடு, ஊத்தோடை போன்ற இடங்களில் உள்ள மத்திய, மாகான சபைக்குரிய விவசாய குளங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்தல் என்பனவற்றுடன் பல்வேறுபட்ட விடயங்களுக்கு தீர்வுகள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது ஆண்டான் குள திருத்த வேலை இடை நடுவில் விடப்பட்டதனால் பிரதேச விவசாயிகள் பல வருடங்களாக தங்களது விவசாயச் செய்கையில் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தங்களது வாழ்வாதரத் தொழிலை எதிர்நோக்கி வருவதாகவும் கருத்து முன்வைக்கப்பட்டது.

குறித்த குள புனரமைப்பு திருத்தப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி விடயங்களில் சமமின்மை காணப்பட்டதனால் திருத்தபணி குறைவேலையாக உள்ளதாகவும் நீதியீட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் அதனை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கமநல அபிவிருத்தி தினைக்கள் அதிகாரியினால் கருத்து முன்வைக்கப்பட்டது. இக் கருத்தினை பரிசீலனை செய்ய உதவி அரசாங்க அதிபர் இவ்வாறான நீதி திட்ட விடயங்கள் தொடர்பான குறைபாட்டு விடயங்களுக்கு அரசாங்க அதிபரின் தீர்மானத்தின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பித்து திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது கருத்து தெரிவித்தார்.

இதேபோன்று ஊத்தோடை, கட்டுமுறிவு, தோணி தாண்ட மடு, ஆண்டான் குளம் போன்ற இடங்களில் விவசாய செய்கையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடிக்கடி தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பேசப்பட்டு வருவதாகவும் அதற்கு ஒழுங்கான தீர்வினை வழங்க அதிகாரிகள் முன் வந்து அவ் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என உதவி அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்

ஜனாதிபதியின் ஆலோசனையின்படி இலவச உர வினியோகம் மேற்கொள்ளப்பட்டுவருவதால் விவசாயிகள் குறித்த காலத்திற்குள் தங்களது விண்ணப்பத்தினை அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என்றும் இம்முறை 50வீதம் அடி உரம் (ரி.எஸ்.பி) வழங்கப்படவுள்ளது. அத்துடன் சேதனப்பசளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கே இரசாயன உரம் வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்ட்டது.

இவ் கூட்டத்தில் வன இலாக தினைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here