சங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்!

விடுதலைப் புலிகளின் விமானப்படை தளபதியாக இருந்த கேணல் சங்கர் மரணமடைந்த போதே, வே.பிரபாகரன் அழுதார் என தெரிவித்துள்ளார் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ரகு என்ற நபர்.

லங்காதீப இதழில் வெளியான அவரது நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கேணல் சங்கர், ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு, பிரபாகரனின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

“எனது வாழ்க்கையில் நான் முதன்முதலாக அழுதது சங்கரின் இழப்பினால்தான். நாமிருவரும் நெருக்கமான நண்பர்கள். சங்கரின் இழப்பு எனது இடதுகையை இழந்ததை போன்ற வேதனையை தந்தது“ என பிரபாகரன் பின்னர் கூறியிருந்தார்.

பின்னர், ஆளில்லாத வேவு விமானம் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை உளவு பார்த்த இராணுவம், கிளிநொச்சியில் தமிழ் செல்வனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டனர்.

தமிழ் செல்வன் தங்கியிருந்த அரசியல்துறை அலுவலகத்தில் செய்மதி தொலைபேசி பொருத்தப்பட்டிருந்தது. தமிழ் செல்வன் தங்கியிருந்த சரியான இடத்தை அடைாளம் காண இது படையினருக்கு வசதியாக போய் விட்டது.

தமிழ் செல்வனின் மரணம் குறித்து தகவல் வெளியானதும், “தமிழீழத்திற்கான போரில் போராளியொருவர் உயிரிழப்து சாதாரணமான விடயம். அதற்காக நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. நாம் எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பிரபாகரன் இறுக்கமான குரலில் சொன்னார். ஆனாலும் மனதளவில் அவர் உடைந்து போனார்.

இக்கட்டான நேரத்திலும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் தமிழ்ச்செல்வனிற்கு இறுதி மரியாதையை பிரபாகரன் நேரடியாக சென்று செலுத்தினார்“ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here