திடீரென விற்று முடியும் வாகனங்கள்!

நாட்டில் அண்மையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் 90 சதவீதம் சமீப காலங்களில் திடீரென விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என்ற அச்சத்தில் மக்கள் திடீரென வாகனங்களை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த பருவத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே எஞ்சியுள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரெஞ்சி, திடீரென அல்லது அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை என்று கூறினார்.

தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வாகன சந்தையில் கிடைக்கின்றன என்று கூறப்பட்டது.

அத்தியாவசியமற்ற பொருட்கள்எமற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here