கொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை!

கொரோனா தொற்றுடன் பத்துநாட்களாக டாக்ஸி ஓட்டியதாக கருதப்படும் நபர் ஒருவர் சிட்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரிலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படும் நபர்களை தேடும் நடவடிக்கையை சிட்னி சுகாதரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபரது டாக்ஸியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 18 ஆம் திகதிக்கும் இடையில் பயணித்தவர்களை தேடிப்பிடிப்பதில் சுகாதாரத்துறையினர் முழு அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சிட்னியில் மூர்பேங்க், பேங்க்ஸ்டவுன், சிப்பிங் நார்டன், லிவர்பூல், லிட்காம்ப், வார்விக் ஃபார்ம் மற்றும் மில்பெர்ரா ஆகிய இடங்களுக்கு இந்தக்காலப்பகுதியில் பயணித்திருப்பது மாத்திரமல்லாமல், தனது டாக்ஸியில் பயணித்தவர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு லிவர்பூல் வைத்தியசாலைப்பகுதியிலிருந்துதான் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16 ஆம் திகதி க்ளென் ஆல்பைனில் உள்ள காம்ப்பெல்டவுன் கோல்ஃப் கிளப், TAB பகுதியில் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை;

மில்டன் உல்லாதுல்லா எக்ஸ் சர்வோஸ் கிளப் செப்டம்பர் 12 மதியம் 2 மணி முதல் மாலை 6.15 மணி வரை;

கார்லோவின் இத்தாலிய உணவகப் பட்டி & கடல் உணவு, உல்லாடுல்லா செப்டம்பர் 12 அன்று இரவு 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை;

செப்டம்பர் 13 அன்று மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை மோனிமூக் என்ற பன்னிஸ்டர்ஸ் பெவிலியன் கூரை பார் & கிரில்

போன்ற இடங்கள் உட்பட மூர்பேங்க், பேங்க்ஸ்டவுன், சிப்பிங் நார்டன், லிவர்பூல், லிட்கோம்ப், வார்விக் ஃபார்ம் மற்றும் மில்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதிக்கும் 18 ஆம் திகதிக்கும் இடையில் பயணித்தவர்கள் உடனடியாக தங்களை கோவிட் சோதனைக்கு உள்ளாக்குமாறு சுகாதரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here